தீராத கலைத்தாகமும், தணியாத நாட்டுப்பற்றும்! கமலுக்கு முதல்வர் வாழ்த்து!

நடிகர் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...
கமலுக்கு முதல்வர் வாழ்த்து
கமலுக்கு முதல்வர் வாழ்த்துPhoto: X / CM MKStalin
Published on
Updated on
1 min read

நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 71-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

கமல்ஹாசனுக்கு நடிகர்களும், அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:

”பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!

நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Tamil Nadu Chief Minister M.K. Stalin wishes actor and Rajya Sabha member Kamal Haasan on his birthday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com