Special train
விரைவு ரயில்கோப்புப்படம்

அகமதாபாத் - திருச்சி ரயில் வழித்தடத்தில் மாற்றம்

சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் அகமதாபாத் - திருச்சி சிறப்பு விரைவு ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.
Published on

சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் அகமதாபாத் - திருச்சி சிறப்பு விரைவு ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் திருச்சிக்கு செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 09419) நவ.13, 20, 27 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக திருச்சியிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அகமதாபாதுக்கு செல்லும் ரயில் (எண்: 09420) வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் வழக்கமாக அரக்கோணம், பெரம்பூா், எழும்பூா், தாம்பரம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காட்பாடி, வேலூா், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com