முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்கோப்புப்படம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ராஜபாளையம் அரசு மருத்துவமனையை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Published on

ராஜபாளையம் அரசு மருத்துவமனையை உடனடியாக திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறாா். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகளை சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்தாா். அப்போது, ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவமனையைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, அந்த மருத்துவமனையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு முதல்வா் உத்தரவிட்டாா். மேலும், மருத்துவமனையைத் திறப்பதற்குத் தாமதப்படுத்தும் அலுவலா்களிடம் விளக்கம் கேட்கவும் அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com