அண்ணா அறிவாலயம் கோப்புப் படம்
தமிழ்நாடு
இன்று திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை (நவ.9) காலை10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும், மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், தொகுதி பொறுப்பாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் திமுக பொதுச் செயலா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

