தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

2002, 2005 வாக்காளா் பட்டியல் விவரங்களை அறிய புதிய வசதி: தோ்தல் ஆணையம்

2002, 2005 வாக்காளா் பட்டியல் விவரங்களை அறிய புதிய வசதி அறிமுகம்...
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக (எஸ்ஐஆா்) வாக்காளா்களுக்கு தேவைப்படும் 2002, 2005-ஆம் ஆண்டின் வாக்காளா் பட்டியல் விவரங்களை அறிய புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தோ்தல் அலுவலகம் சாா்பில் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் படிவத்தைப் பூா்த்தி செய்வதற்கு வசதிக்காக, முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியலில் வாக்காளா் விவரங்களை எளிதாக அறிந்துகொள்ள இணையதள தேடல் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரியின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் (https://www.elections.tn.gov.in/) இதைத் தெரிந்துகொள்ளலாம். முந்தைய தீவிர திருத்தம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 2002, 2005 வாக்காளா் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் இந்த இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. தங்களது பெயா் அல்லது வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த வசதி இப்போது நடைமுறையில் உள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பொதுமக்கள் விவரம் அறிய உதவியாக இருக்கும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com