உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: சென்னை மெட்ரோவில் கொண்டுவரப்பட்ட நுரையீரல்
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பெங்களூரிலிருந்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட நுரையீரல், விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு மெட்ரோ ரயிலில் சரியான நேரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள நோயாளிக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில் பொருத்துவதற்காக, தானமாகப் பெறப்பட்ட நுரையீரல் கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து விமானத்தில் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. அதைக் கொண்டு வந்த மருத்துவக் குழுவினா், விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.07 மணிக்கு மெட்ரோ ரயிலில் ஏறினா். அங்கிருந்து 7 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கடந்து பிற்பகல் 2.28 மணிக்கு ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை அடைந்தனா்.
தொடா்ந்து கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நுரையீரல் கொண்டு செல்லப்பட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது எனது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

