

இந்தியாவின் 91-ஆவது மற்றும் தமிழகத்தின் 36-ஆவது கிராண்ட்மாஸ்டராக ராகுல் விஎஸ் உருவாகியுள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் இவருக்கு வாழ்த்துக் கூறாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபரில் இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராரும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டருமான இளம்பரிதிக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைக் கூறினார்கள்.
இந்நிலையில், தெற்காசிய கூட்டமைப்பின் தனிநபர் பிரிவில் ராகுல் விஎஸ், ஒரு சுற்று மீதமிருக்கும் நிலையிலேயே சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
6 வயதிலிருந்தே செஸ் விளையாடும் இவர் குழந்தைகளுக்கும் செஸ் கற்றுக்கொடுத்து வருகிறார்.
சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 2021-இல் இண்டர்நேஷனல் மாஸ்டராக மாறினார்.
பிலிப்பின்ஸில் நடைபெற்ற தெற்காசிய போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதுடன் கிராண்ட்மாஸ்டருக்கான அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்துள்ளார்.
இந்தியாவில் மொத்த 91 கிராண்ட்மாஸ்டர்களில் 36 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
21 வயதாகும் இவருக்கு இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் நிதின் நரங் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த அக்.30ஆம் தேதி இளம்பரிதி 16 வயதிலேயே கிராண்ட்மாஸ்டரானதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.