நாகை அருகே கிராம நிர்வாக அலுவலர் மர்ம மரணம்!

கிராம நிர்வாக அலுவலர் மர்ம மரணம் பற்றி..
உயிரிழந்த விஏஓ
உயிரிழந்த விஏஓ
Published on
Updated on
1 min read

நாகை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் பணியிடை நீக்கத்திலிருந்த கிராம நிர்வாக அலுவலர் தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நாகை கிழக்கு கடற்கரைச் சாலை செல்லூர் அருகே சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸார் நிகழ்விடத்திற்குச் சென்று சாலையோரத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்ட சடலம் யார் என்பது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வழக்கரை பிரதான சாலையைச் சேர்ந்த தையான் மகன் ராஜாராமன் (38). இவர் கிராம நிர்வாக அலுவலர் என்பதும் கடந்த 2024 ஆம் ஆண்டில் லஞ்சம் பெற்றதற்காக பணியிடை நீக்கத்தில் தற்போது வரை இருந்ததும், லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு நாகைக்கு வெள்ளிக்கிழமை வந்ததும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வெளிப்பாளையம் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து ராஜா ராமன் கொலை செய்யப்பட்டாரா?, விபத்தில் இருந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ராஜாராமனுக்கு, மனோ சித்ரா என்ற மனைவியும், தஸ்வின் என்ற எட்டு வயது மகனும் உள்ளனர். இவரது மனைவி, காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

Summary

Regarding the body of a village administrative officer who was on leave of absence, found with head injuries on the East Coast Road near Nagai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com