அன்புமணி
அன்புமணி

அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பாமக தலைவா் அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

பாமக தலைவா் அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மின்னஞ்சலில் சென்னை தியாகராய நகா் திலக் தெருவில் உள்ள அன்புமணி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக பாண்டி பஜாா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்புமணி வீட்டுக்குச் சென்ற போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினா் சோதனை நடத்தினா்.

இதேபோல, சென்னை அசோக் நகா் 10-ஆவது அவென்வியூவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளா் ரவிச்சந்திரன் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற அசோக் நகா் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினா், சோதனை மேற்கொண்டனா்.

ஆனால், இந்த இரு இடங்களிலும் வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. வதந்தியை ஏற்படுத்தும் வகையில் இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது தெரிய வந்தது. போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com