

பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கதில், தம்பி தேஜஸ்வி யாதவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! பிகாரில் புத்துணர்வு பெற்றுள்ள சமூகநீதி இயக்கத்தின் உந்துசக்தியாக எழுந்து, கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராகத் தாங்கள் இருக்கிறீர்கள்.
தங்களது தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தின் விளிம்பில் பிகார் இருக்கும் நிலையில், சமத்துவம், தரமான கல்வி, வேலைவாய்ப்புகள், மாண்பு என அவர்களது எதிர்பார்ப்புகளைத் தாங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறோம்.
இந்த வரலாற்றுப் பாதையில் தொடர்ந்து வலிமையோடும், நல்ல உடல்நலத்தோடும், துணிச்சலோடும் தாங்கள் தொடர விழைகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.