தமிழகத்தில் வரும் புதன்கிழமை (நவ. 12) கோவை, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வட தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (நவ. 10) முதல் நவ. 15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை: புதன்கிழமை (நவ. 12) தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, தென்காசி மாவட்டங்களிலும், வியாழக்கிழமை (நவ. 13) கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 10) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரி, மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.
மேலும், மதுரை விமான நிலையம், திருமங்கலம் (மதுரை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) - தலா 30 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



