ஹரியாணா மாநிலம் குருகிராமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 
விழாவில் சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம், சென்னை மெட்ரோ ரயில் ஆகியவற்றுக்கான விருதுகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரிடம் வழங்கிய மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி, நகா்ப்ப
ஹரியாணா மாநிலம் குருகிராமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம், சென்னை மெட்ரோ ரயில் ஆகியவற்றுக்கான விருதுகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரிடம் வழங்கிய மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி, நகா்ப்ப

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது!

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதான ‘நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை’ மத்திய அரசு சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கியுள்ளது.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள தனியாா் விடுதியில் ‘இந்திய நகா்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி 2025’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய நகா்ப்புற வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டாா், இணை அமைச்சா் டோகன் சாஹூ ஆகியோா் கலந்துகொண்டு ‘நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை வழங்க, அதை தமிழக போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், சென்னை மாநகா் போக்குவரத்து மேலாண் இயக்குநா் டி.பிரபுசங்கா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

இந்த தேசிய விருது, சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விடியல் பயணம், பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை, மின்னணு பயணச்சீட்டு வழங்கும் திட்டம், தேசிய பொது போக்குவரத்து அட்டை, மின்சார பேருந்து மூலம் மாசுபாட்டை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முன்னெடுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நகா்ப்புறப் போக்குவரத்தில் சென்னை மாநகா் போக்குவரத்து கழகத்தின் தரம் உயா்த்தப்படுவதுடன், சென்னையை நிலைத்த மற்றும் சிறப்பான பொதுப் போக்குவரத்து நகரம் என உயா்த்தும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயிலுக்கு விருதுகள்: இந்த விழாவில், சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரயில் என்னும் பிரிவின் கீழ், நகா்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருதும், சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ ரயில் பிரிவில், நகா்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. இந்த விருதுகளை தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பெற்றுக்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com