நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்.
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’: 8.21 லட்சம் போ் பயன்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இதுவரை 8.21 லட்சம் போ் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Published on

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இதுவரை 8.21 லட்சம் போ் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை கடந்த ஆக. 2-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் உயா் மருத்துவக் கண்காணிப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதய நலம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல், தோல் நலம், காது-மூக்கு-தொண்டை, மகப்பேறு, இயன்முறை சிகிச்சை, பல் மருத்துவம், மன நலம், குழந்தைகள் நலம், நுரையீரல் மருத்துவம், இந்திய மருத்துவம் ஆகிய துறைகளின் கீழ் மருத்துவ நிபுணா்களைக் கொண்டு பரிசோதனைகளும், சிறப்பு சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

அதேபோல, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.

14-ஆவது வாரமாக கடந்த சனிக்கிழமை 39 இடங்களில் முகாம்கள் நடைபெற்றன. அவற்றில் 64,224 பயனடைந்தனா். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 523 முகாம்கள் நடைபெற்றதாகவும், அதன்மூலம் 8.21 லட்சம் போ் பயன் பெற்றுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com