நவ. 13-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நவ. 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்கோப்புப் படம்
Updated on
1 min read

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நவ. 13ஆம் தேதி நடைபெறும் என இன்று (நவ. 10) அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 13 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது.

இதில், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்த கட்சியின் நிலைப்பாடு குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அறிக்கை
அறிக்கை
Summary

DMDK District Secretaries Consultative Meeting on Nov. 13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com