

மத்திய அரசின் நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருது பெற்ற சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது என்ஸ் தளத்தில், இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள MTC Chennai -க்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கும் பாராட்டுகள்!
Last Mile Connectivity, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதான ‘நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை’ மத்திய அரசு சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கியுள்ளது.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள தனியாா் விடுதியில் ‘இந்திய நகா்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி 2025’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய நகா்ப்புற வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டாா், இணை அமைச்சா் டோகன் சாஹூ ஆகியோா் கலந்துகொண்டு ‘நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை வழங்க, அதை தமிழக போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், சென்னை மாநகா் போக்குவரத்து மேலாண் இயக்குநா் டி.பிரபுசங்கா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
இந்த தேசிய விருது, சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விடியல் பயணம், பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை, மின்னணு பயணச்சீட்டு வழங்கும் திட்டம், தேசிய பொது போக்குவரத்து அட்டை, மின்சார பேருந்து மூலம் மாசுபாட்டை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முன்னெடுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.