

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோவிலில் 70 வயதை பூர்த்தி அடைந்த தம்பதியர்களை திருக்கோயில் சார்பாக சிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கொடுத்து 70 வயதை பூர்த்தி செய்த தம்பதிகள், கோயிலுக்கு வரவழைக்கப்பட்டு பட்டு வேஷ்டி, பட்டுப்புடவை என சீர்வரிசை கொடுத்து கோயில் நிர்வாகம் சிறப்பித்துள்ளது. இந்த காணக்கிடைக்காத காட்சியை கோயிலுக்கு வந்த பக்தர்களும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி 70 வயது பூர்த்த அடைந்த தம்பதியர்களை திருக்கோவில் சார்பாக சிறப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
தொடர்ந்து நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலில் 70 வயது பூர்த்தி அடைந்த தம்பதியர்கள் மொத்தம் 55 பேரை வரவழைத்து அவர்களுக்கு 2,500 மதிப்புள்ள பட்டுப் புடவை, வேஷ்டி மற்றும் சீர்வரிசைகளை வழங்கி, அவர்களை சிறப்பித்தனர்.
கோயில் முழுவதும் 70வது திருமணம் நடப்பது போல் விமர்சையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தம்பதிகளின் குடும்பத்தினர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். கோயில் முழுவதும் 70 வயது பூர்த்தியடைந்த தம்பதியினரும், அவர்களது குடும்பமும் மகிழ்ச்சியுடன் காட்சியளித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இது போல 70 வயதை பூர்த்தி செய்த பெரியவர்களை ஒரே இடத்தில் காண்பது ஒரு அறிய காட்சியாகவும் அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.