மோடிதான் எங்கள் டாடி; காங்கிரஸ் தேவையில்லை! தமிழ்நாட்டுக்கு அதிமுக, திமுக! - ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு...
Minister Rajendra balaji speech in sivakasi
சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுADMK
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டுக்கு அதிமுக, திமுக கட்சிகள் போதும், வேறு கட்சிகள் தேவையில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசி சட்டமன்ற தொகுதி சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய அவர்,

"அதிமுக ஆட்சியில் 5 ரயில்வே மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டினோம். 2 பாலங்களை திறந்துவைத்து விட்டோம். ஆட்சி மாற்றம் வந்தது. மற்ற பாலங்களின் பணியை நிறுத்தி வேறு டெண்டர் எடுத்து வேலை செய்தார்கள். இப்போது திமுகதான் இந்த பாலங்களை கொண்டுவந்ததுபோல பேசுகிறார்கள். மத்திய அரசிடம் உங்களால்(திமுக) அனுமதி வாங்க முடியுமா?

மத்திய அரசில் எங்கள் ஐயா மோடி இருக்கிறார். எங்கள் டாடிதான் இருக்கிறார். நாங்கள் சொன்னால்தான் ரயில்வே பாலத்துக்கு அனுமதி கொடுப்பார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் என்று சொன்னால் அனுமதி கொடுக்கமாட்டார். அவர் இந்த தொகுதிக்கு எதாவது செய்திருக்கிறாரா? அவர் செய்ததுபோல சொல்கிறார். 3 முறை எம்.பி.யாக இருந்துகொண்டு எதுவுமே செய்யாமல் இருந்துகொண்டு காங்கிரஸ் கட்சிக்காரர் இந்த நாட்டுக்குத் தேவையா? நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக இரண்டுதான் பலமான கட்சிகள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். வேறு கட்சிக்கு இங்கு வேலையே கிடையாது.

ஒன்று நாங்கள் ஆள்கிறோம், அவர்கள்(திமுக) வாழட்டும், அதைப்பற்றி கவலை கிடையாது. அதிமுக அல்லது திமுக.. இதுதான் மக்கள் முடிவு. தொற்றிக்கொண்டு வரும் உங்களுக்கு(காங்கிரஸ்) ஏன் இவ்வளவு?

அதிமுக எதுவும் செய்யவில்லை என்று சொல்கிறார் மாணிக்கம் தாகூர். அவர் என்ன செய்தார் என திரும்பிப் பார்க்க வேண்டும்.

இந்த தொகுதியில் ரயில்வே மேம்பாலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டதே அதிமுகதான். பரிசோதனை செய்து மத்திய அரசிடம் அனுமதி வாங்கியது அனைத்தும் அதிமுகதான்" என்று பேசியுள்ளார்.

சிவகாசி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இதற்கு காரணம் நாங்கள்தான் என திமுகவினரும் அதிமுகவினரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

Summary

Minister Rajendra balaji speech in sivakasi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com