எஸ்ஐஆர் படிவத்தை திமுகவினர் பூர்த்தி செய்து கொடுப்பதில் என்ன தவறு? - கே.என். நேரு கேள்வி

திருப்பதிக்கு நன்கொடை கொடுத்தது குறித்து அமைச்சர் கே.என். நேரு விளக்கம்...
minister KN Nehru on sir form distribution by dmk people
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தெரியாதவர்களுக்கு எஸ்ஐஆர் படிவத்தை திமுக நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? என அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கடந்த நவ. 9 ஆம் தேதி தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தில் ஒருநாள் அன்னதானம் வழங்க ரூ. 44 லட்சம் நன்கொடை செலுத்தியிருந்தார். இதுபற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி முக்கொம்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 4 லட்சம் கட்லா, கல்பாசு, மிர்கால் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"திருச்சி மாவட்டத்தில் இருக்கும் 9 சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அனைத்து வாக்காளருக்கும் அந்த படிவங்களை கொடுக்கும் பணிகளில் அங்கன்வாடி, சத்துணவு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

திமுக நிர்வாகிகள், எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஆட்சியில் இருக்கும் நீங்கள், மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என நீங்கள் கேள்விகேட்க மாட்டீர்களா?தெரியாதவர்களுக்கு படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதில் என்ன தவறு உள்ளது?

த.வெ.க. தலைவர் விஜய்க்கு வேண்டுமானால் திமுக நல்லவர்களாக இல்லாமல் தெரியலாம். அவருக்கு தெரியாவிட்டால் நாங்கள் என்ன செய்வது? ஆனால், நாட்டு மக்களுக்கு திமுகவும் முதலமைச்சரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். பல நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்காக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். திமுக நல்லவர்போல் வேஷம் போடவில்லை. உண்மையாக நல்லவர்களாக இருப்பதால்தான் பல அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விடுபட்ட மக்களுக்கு உரிய திட்ட சலுகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் முதல்வரை வரவேற்கிறார்கள்.

ஜல் ஜீவன் திட்டம், 100 நாட்கள் வேலை திட்டம், மெட்ரோ திட்டம் உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் மத்திய அரசு அனுமதியும் வழங்கவில்லை, நிதியும் வழங்கவில்லை..

210 தொகுதிகளில் வெல்லும் எனக் கூறும் வேலுமணி ஏன் மீதமுள்ள 24 தொகுதிகளை விட்டுவிட்டார்? என்றார்.

நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு 44 லட்சம் நன்கொடை வழங்கக்கூடாதா? நான் வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும். எல்லாரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா?" என்று கூறினார்.

Summary

minister KN Nehru on sir form distribution by dmk people

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com