கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.14) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.14) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வெள்ளிக்கிழமை (நவ.14) முதல் நவ.19 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்சமாக வெப்பநிலை 92 டிகிரியையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி, மாஞ்சோலை- 70 மி.மீ., ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி) 60 மி.மீ., அடவிநயினாா் அணை (தென்காசி), ராதாபுரம் (திருநெல்வேலி)-50 மி.மீ, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூா்)-40 மி.மீ, பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகா்), நம்பியாறு அணை (திருநெல்வேலி), கருப்பாநதி அணை, குண்டாறு அணை (தென்காசி), பாபநாசம் (திருநெல்வேலி)- 30 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் வெள்ளிக்கிழமை சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com