

தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (SIR) எதிரான மனுவில் உச்ச நீதிமன்றம் பதிலளித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பி. ஆறுமுகம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் தோலா சென், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சுபங்கர் சர்க்கார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அமர்வில், செவ்வாய்க்கிழமையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இரு மாநிலங்களின் மனுக்கள் மீதும் வாதாட மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜரானார்.
விசாரணையின்போது கபில் சிபல், ``மாநிலத்தில் பலத்த பருவமழை மற்றும் பரவலான விவசாய நடவடிக்கைகளின்போது, இந்த திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது, பெரும்பாலான மக்கள் இந்த திருத்தப் பணியில் பங்கேற்க மாட்டர்.
மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் அடிப்படை இணைப்பு இல்லாமல் மோசமான நிலையும் இருந்து வருகிறது’’ என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறப்பு தீவிர திருத்தம் மூலம புதிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் உருவாக்குவதுபோல் மனுதாரர்கள் கருதுவதாகத் தெரிகிறது. கள நிலவரம், நடைமுறைச் சவால்கள் குறித்த கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, ``சாமானிய மக்களை எளிதில் சென்றடையும் வகையில், இந்த திருத்தப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசியலமைப்பு அதிகாரம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது; அதுமட்டுமின்றி, எந்தவொரு செயல்பாட்டுக் குறைபாடுகளையும் சரிசெய்யவும் முடியும்’’ என்று நீதிபதிகள் கூறினர்.
பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தினால், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு தெரிவிப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துகளும் நிலவுகின்றன.
இதையும் படிக்க: தில்லி குண்டு வெடிப்பு! புல்வாமா தாக்குதல் அமைப்புடன் பெண் மருத்துவருக்கு தொடர்பா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.