2002, 2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள் தேடுபவரா... தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள்!
சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தில் நிரப்ப 2002, 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரும் அரசு செயலருமான அர்ச்சனா பட்நாயக் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
சிறப்பு தீவிர திருத்தம் 2002, 2005 வாக்காளர் பட்டியலுக்கான இணையதள தேடுதல் வசதி
முந்தைய தீவிர திருத்தம் 2002/2005 இன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை எளிதாக கண்டறிய வசதியாக https://www.voters.ecl.gov.in/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளிடப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் (www.voters.eci.gov.in) "Search your name in the last SIR" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதில் மாநிலத்தின் பெயரை (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில் ‘பெயர் மூலம் தேடுதல்’ அல்லது ‘EPIC எண் மூலம் தேடுதல்’ என்ற விருப்பங்களைப் பயன்படுத்தி தங்கள் விவரங்களை மீட்டெடுக்கலாம்.
‘பெயர் மூலம் தேடுதல்’ என்ற விருப்பத்தின் மூலம் தேடும்போது மாவட்டத்தின் பெயர், சட்டப்பேரவைத் தொகுதி பெயர், வாக்காளரின் பெயர், தந்தை / தாய் / கணவர் / சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரிபார்ப்புக் குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து வாக்காளர் தங்களது விவரங்களைப் பெறலாம்.
முந்தைய தீவிர திருத்தம் 2002/2005 இன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை எளிதாக கண்டறிய வசதியாக https://www.voters.ecl.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ளிடப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் (online) கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ இணையதளமான https://www.voters.ecl.gov.in - இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணையதளம் மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை பயன்படுத்தி இணையதளம் மூலம் (online) உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும்.
உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் ‘Fill Enumeration Form’ என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.
இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும்.
அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
அந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.
தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும். மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
The Election Commission has released instructions for searching for 2002 and 2005 voter list details!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

