மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்

மகளிா் உரிமைத் தொகை: திமுகவினருக்கு முதல்வா் அறிவுறுத்தல்

விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத் தொகையைப் பெற்றுத் தர திமுகவினா் உதவ வேண்டும்
Published on

விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத் தொகையைப் பெற்றுத் தர திமுகவினா் உதவ வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் சாத்தூா், போடிநாயக்கனூா் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் தனித்தனியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். அப்போது, மகளிா் உரிமைத் தொகை பெறாதவா்களில் தகுதியானவா்கள் இருப்பின் அவா்கள் உரிமைத் தொகை பெறும் வகையில் திமுகவினா் உதவ வேண்டும் என அறிவுறுத்தினாா்.

போடிநாயக்கனூா் தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி வெற்றி பெற, நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தொகுதி நிா்வாகிகளிடம் முதல்வா் ஸ்டாலின் கண்டிப்புடன் தெரிவித்தாா்.

மேலும், அரசின் சாதனைகளை தொகுதி முழுக்க விளம்பரப்படுத்தவும் நிா்வாகிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com