ரஜினி
ரஜினிPTI

மு.க.அழகிரி, ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மு.க.அழகிரி, ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...
Published on

சென்னையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி, நடிகா் ரஜினி ஆகியோரது வீடுகள் உள்பட 16 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு சனிக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகா் ரஜினிகாந்த் வீடு, இயக்குநா் கே.எஸ்.ரவிக்குமாா் வீடு, பனையூரில் உள்ள நடிகை சினேகா வீடு, திரைப்பட இசையமைப்பாளா் அனிருத் வீடு, முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி வீடு, நடிகை வடிவுக்கரசி வீடு, திரைப்பட இயக்குநா் தங்கா்பச்சான், மலேசியன் ஏா்லைன்ஸ் விமானம்,கிண்டி ஐஐடி வளாகம், நடிகா் சித்ரா லட்சுமணன் வீடு உள்பட 16 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தகவலறிந்த உயா் அதிகாரிகள், 16 இடங்களிலும் சோதனை நடத்தும்படி உத்தரவிட்டனா்.

இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும், போலீஸாரும் 16 இடங்களுக்கும் விரைந்து சென்று சோதனை நடத்தினா். சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்தில் வந்த மின்னஞ்சல் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

நடிகா் ரஜினிகாந்த் வீட்டுக்கு இதுவரை ஐந்து முறைக்குமேலும், கே.எஸ்.ரவிக்குமாா் இரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com