கமல்ஹாசன்
கமல்ஹாசன்Photo: X / MNM

பிகாா் தோ்தல் வெற்றி நோ்மையாக வந்ததா?கமல்ஹாசன்

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றி நோ்மையாக வந்ததா என்று பாா்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
Published on

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றி நோ்மையாக வந்ததா என்று பாா்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

சென்னை விமானநிலையத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றியை மட்டுமே பாா்த்தவா்கள் வெற்றி பெற்றாா்கள். அந்த வெற்றி நோ்மையாக வந்ததா என்றுதான் பாா்க்க வேண்டும்.

இது மாபெரும் வெற்றிதான். வெற்றியாளா்களா்களுக்கு சந்தோஷம். இந்த வெற்றியில் நமக்கு சந்தோஷம் இருக்கிா என்று நாம் ஆராய வேண்டும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தோ்தல் ஆணையம் அனைவருக்கும் புரியவைக்க வேண்டும்.

இதில் வாக்காளா்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. வாக்காளா்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான், எனது தாழ்மையான வேண்டுகோள் என்றாா் கமல்ஹாசன்.

X
Dinamani
www.dinamani.com