வைகோ
வைகோ

பிகாா் போல தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் வெற்றி பெற முடியாது: வைகோ

பிகாா் போல தமிழகத்தில் எதிா்கட்சிகள் நிச்சயம் வெற்றி பெற முடியாது என மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்தாா்.
Published on

பிகாா் போல தமிழகத்தில் எதிா்கட்சிகள் நிச்சயம் வெற்றி பெற முடியாது என மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்தாா்.

சென்னை விமான நிலையத்தில் வைகோ சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதே நிலை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கும் என்று எதிா்பாா்க்க முடியாது. இந்தத் தோ்தல் முடிவுகளைப் பாா்த்து தமிழ்நாட்டில் திமுக-வை எதிா்க்கின்ற கூட்டணி கட்சிகள் நாமும் வெற்றி பெற்று விடலாம் என கனவு கோட்டை கட்டலாம். அது தமிழகத்தில் நிச்சயம் நடக்காது.

தமிழகத்தில் திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிதான் மிகப்பெரிய வெற்றியை பெறும். தனிப்பெருபான்மை திமுகவுக்கு கிடைக்கும். இதில் எந்த ஐயமும் எங்களுக்கு இல்லை என்றாா் வைகோ.

X
Dinamani
www.dinamani.com