தவெக விஜய் (கோப்புப்படம்)
தவெக விஜய் (கோப்புப்படம்)

எஸ்ஐஆா்-க்கு எதிா்ப்பு: தவெக நாளை ஆா்ப்பாட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) கண்டித்து தவெக சாா்பில், மாவட்டத் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) கண்டித்து தவெக சாா்பில், மாவட்டத் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தவெக சாா்பில் எஸ்ஐஆா் பணிகளுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அந்தக் கட்சியின் இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com