திருப்போரூா் அருகே சிறிய விமானம் விபத்து: சகதியில் புதையுண்ட பாகங்களை மீட்கும் பணி தீவிரம்

திருப்போரூா் அருகே சிறிய விமானம் விபத்துக்குள்ளாகி சகதியில் புதையுண்ட பாகங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிறிய ரக விமான விபத்து
சிறிய ரக விமான விபத்து
Published on
Updated on
1 min read

திருப்போரூா் அருகே இயந்திர கோளாறு காரணமாக பயிற்சி விமானம் வெடித்து சிதறி, சகதியான பகுதியில் விழுந்து நொறுங்கிய நிலையில், புதையுண்டு இருக்கும் விமானப் பாகங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்தது மிகப்பெரிய சேறு நிறைந்த இடம் என்பதால், விமானம் விழுந்த வேகத்தில் சுமார் 15 அடி ஆழம் வரை விமானத்தின் பாகங்கள் சிதறி விழுந்துள்ளன.

அவற்றைத் தேடும் பணியும், விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்கும் பணியிலும் விமானப் படை மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் பணிகள் நிறைவு பெறும் என்று திருப்போரூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விமானம் விழுந்து விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக,. விமானி பாராசூட் மூலம் தப்பியதால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் முருகன் கோயிலில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் சாலையின் அருகே உள்ள உப்பு சுத்திகரிக்கும் ஆலையின் பின்பகுதியில், மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானம் இயந்திர கோளாறு காரணமாக பயங்கர சப்தத்துடன் வெள்ளிக்கிழமை வெடித்துச் சிதறி சேற்றுக்குள் புதைந்தது.

முன்னதாக இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணத்தை அறிந்த பயிற்சி விமானி சுபம் சாதுரியமாக விமானத்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திருப்பி விட்டு பாராசூட் மூலம் இரண்டு கி.மீ. முன்னதாகவே குதித்துள்ளார்.

இதில் இவருக்கு முதுகு தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதலுதவி அளிக்கப்பட்டதையடுத்து, விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டா் மூலம் அவா் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதனால் நேற்று பிற்பகலில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com