பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

எஸ்ஐஆர்-க்கு எதிராக தவெக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து தவெக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

News image
Updated On :15 நவம்பர் 2025, 2:22 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், கட்சிப் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ``வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழகத்தில் இருந்து முதன்முறையாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்தான்.

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.

தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக, ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) காலை 11 மணி முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் கழகத் தோழர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

summary

TVK protests against Special Intensive Revision

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.