

திமுகவின் ஒரேநோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதுதான் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பது அதிகமான ஆசையாகக் கூட இருக்கலாம். ஆனால், நிச்சயமாக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.
மக்களின் மனநிலை மாறி உள்ளது. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று யூகத்தின் அடிப்படையில் சொல்கிறேன். அது நடக்கலாம் அல்லது அதிகமான ஆசையாக கூட இருக்கலாம். இப்போது நாங்கள் அதிமுக கூட்டணியில் உள்ளோம்.
திமுக அரசு சொன்னது எதையும் செய்வதில்லை. அவர்களின் ஒரே நோக்கம் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவதுதான். திமுக கூட்டணி இந்த நான்கு வருடத்தில் எந்த வேலையும் பார்க்கவில்லை.
மத்திய அரசு கொண்டுவரும் எல்லாத் திட்டங்களையும் எதிர்ப்பதுதான் அவர்களது வேலை. பிகாரில் 202 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைப் பார்த்துத் தமிழகத்தில் எல்லோரும் மிரண்டு போய் உள்ளார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
BJP state president Nainar Nagendran has said that the DMK's sole objective is to make Udhayanidhi the Chief Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.