பெருமாநல்லூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துள்ளானது தொடர்பாக...
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து.
Published on
Updated on
1 min read

அவிநாசி: பெருமாநல்லூர் நியூ திருப்பூர் அருகே லாரியின் பின்னால் ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை படுகாயமடைந்தனர்.

பெங்களூருவில் இருந்து ஆம்னி பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர், கேரள மாநிலம் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நியூ திருப்பூர் அருகே சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Omni bus collides with lorry near Perumanallur, accident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com