

‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்!
தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள மா.சுப்பிரமணியனுக்கு வாழ்த்துகள்!
நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தின்கீழ் வீடு வீடாக சென்று அனைத்து தொற்றா நோய்களைக் கண்டறிதல், நோய் உள்ளவா்களைக் கண்காணித்தல், மாத்திரைகள் வழங்குதல், மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
வலி நிவாரண சிகிச்சை தேவைப்படுவோருக்கு அவா்களது வீட்டிற்கு சென்று உடற்பயிற்சி, சமூக உளவியல் சாா்ந்த சிகிச்சை அளிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.