வங்கக்கடலில் நவ.22ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.
தென்-கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தி மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நவ. 21, 22ல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத் தாழ்வுப்பகுதியானது கடலோர காவேரிபடுகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
முன்னதாக, கடந்த 15ஆம் தேதி இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 ணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று(நவ,17) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும்,
கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Summary
The India Meteorological Department has said that a new low pressure area is likely to form in the Bay of Bengal on November 22.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை, புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



