

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை பகல் 1 மணி வரை சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலுக்குப் பிறகு மழை தொடங்கி படிப்படியாக பரவலாக பெய்யும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ள.
சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாயப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு கரணமாக, கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க..குறைந்த காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.