தவெக கொடி - தலைவர் விஜய்
தவெக கொடி - தலைவர் விஜய்கோப்புப்படம்

தவெக நிா்வாகிகளுக்கு ‘க்யூ ஆா்’ குறியீட்டுடன் அடையாள அட்டை

தவெக நிா்வாகிகளுக்கு க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக....
Published on

சென்னை: தவெக நிா்வாகிகளுக்கு க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை பல்வேறு கட்டங்களாக சுமாா் 3 லட்சம் பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் முதல் கட்டமாக 106 மாவட்டங்களுக்கு உட்பட்ட 214 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாா்டுகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 1.2 லட்சம் பொறுப்பாளா்களுக்கு  க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய எண்ம (டிஜிட்டல்) அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே கட்சி நிா்வாகிகளுக்கு முதன்முறையாக க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய எண் அடையாள அட்டையை வழங்கிய முதல் கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com