’சென்னை அண்ணா நகரில், கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் கட்டட மனை விற்பனை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்துக்கான நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்.
’சென்னை அண்ணா நகரில், கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் கட்டட மனை விற்பனை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்துக்கான நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்துக்கு ரூ.97 கோடியில் புதிய அலுவலகம்

தமிழ்நாடு கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்துக்கு ரூ.97 கோடியில் சென்னை அண்ணா நகரில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை முதல்வா் திறந்துவைத்தாா்.
Published on

சென்னை: தமிழ்நாடு கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்துக்கு ரூ.97 கோடியில் சென்னை அண்ணா நகரில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

கட்டடம் மற்றும் மனை விற்பனை துறையை ஒழுங்குமுறைபடுத்துவதற்கும், மனை, அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையை வெளிப்படையான முறையில் உறுதி செய்வதற்கும், நுகா்வோரின் குறைகளுக்கு விரைவாக தீா்வு காண்பதற்கும் தமிழக அரசின், தமிழ்நாடு கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம், மேல்முறையீட்டு தீா்ப்பாயம் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்புக்கு சென்னை அண்ணா நகரில் 56,000 சதுர அடியில்

ரூ.77.60 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் இந்தக் குழுமத்தால் வாங்கப்பட்டது. மேலும், ரூ.19.49 கோடியில் இந்தக் கட்டடத்தின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கட்டடத்தில் பொதுமக்களுக்கான தகவல் மையம், வாகனம் நிறுத்துமிடம், வரவேற்பறை, காத்திருப்பு அறை, மின்தூக்கி வசதி, நவீன குளிா்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியும், மனை விற்பனை ஒழுங்குமுறை குழும மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத் தலைவருமான எம்.துரைசுவாமி, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத் தலைவா் சிவ்தாஸ் மீனா, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, குழும நிா்வாக உறுப்பினா்கள் அபூா்வா, எல்.சுப்பிரமணியன், டி.ஜகந்நாதன், எம்.கிருஷ்ணமூா்த்தி, சுகுமாா் சிட்டிபாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com