உழவர் நல சேவை மையங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்: டிசம்பரில் தொடக்கம்

Published on
Updated on
1 min read

முதல்வரின் உழவர் நல சேவை மையங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கிவைக்கவுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த 20 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில், 1,000 "முதல்வரின் உழவர் நல சேவை' மையங்களுக்கு 30 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தமிழக அரசு சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் சேவை மையங்களுக்கு 30 சதவீதம் அதாவது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1,768 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பித்தவர்களில் வங்கிகளில் கடன் பெறும் வகையில் 973 பயனாளர்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வங்கிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

இதில், இதுவரை 413 பேருக்கு வங்கிக் கடன் கிடைத்துள்ளது. மேலும், விண்ணப்பித்துள்ள ஏனைய இளைஞர்களுக்கும் விரைவில் வங்கி கடன் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல், வங்கிக் கடன் பெற்றவர்களில் 237 பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதற்கு மாநில அளவிலான தேர்வுக்குழு இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

இப்பயனாளிகளுக்கு உழவர் நல சேவை மையங்களை திறம்பட நிர்வகிக்க 15 நாள்களுக்கு அரசு சார்பில் உரிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், உழவர் நல சேவை மையங்களை அமைக்க 30 சதவீத மானியம் 2 தவணைகளாக வழங்கப்படவுள்ளன.

ஆர்வமுள்ள இளைஞர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கிகளில் கடன் ஒப்புதல் பெற்று ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹஞ்ழ்ண்ள்ய்ங்ற்.ற்ய். ஞ்ர்ஸ்.ண்ய்/ஓஹஸ்ண்ஹஈட/ழ்ங்ஞ்ண்ள்ற்ங்ழ் என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாநில அளவிலான தேர்வு குழு சார்பில் 500 பயனாளிகளுக்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கி, இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com