

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை(நவ. 19) கோவையில் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025 நாளை(புதன்கிழமை) முதல் 3 நாள்களுக்கு கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்து, சிறப்பாகச் செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கவுள்ளாா். இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகிக்கிறாா். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனா்.
இந்நிலையில் கோவை வரும் பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவையில் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் பிரதமர் மோடியைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
பாஜக தலைவர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.