

கோவை: தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி கோவை வருகை புரிய உள்ள நிலையில் கோவை விமான நிலையத்தில் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாத கார்களை காவல் துறையினர் அகற்றி வருகிறார்கள்.
கோவைக்கு நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவிருக்கிறார். கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் அவர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு மாநகர் முழுவதும் போடப்பட்டு உள்ளது.
தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி கோவை விமான நிலையம் வர உள்ள நிலையில் இன்றும், நாளையும் கார்களை பார்க்கிங் செய்ய காவல் துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர்.
இதனால் ஏற்கனவே நிறுத்தி விட்டுச் சென்ற உரிமையாளர்கள் கார்களை எடுக்காததால் அவற்றினை காவல் துறையினரே கிரேன் வாகனங்களை வைத்து அப்புறப்படுத்தி தனியார் பார்க்கிங் பகுதிக்கு கொண்டு செல்கின்றனர்.
இதை தொடர்ந்து உள்ளே வரும் கார்களை விமான நிலையத்தில் நிறுத்தவும் காவல் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.