பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
Published on

அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

திமுக கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தல் காலத்தில் “பழைய ஓய்வூதியத் திட்டம்” அமல்படுத்தப்படும் என உறுதியளித்தது. இந்த நிலையில், அதை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் ஈடுபடுபவா்களை மிரட்டுவது ஏற்க தக்க நடைமுறை அல்ல.

எனவே, ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com