‘பிஎம் கிசான்’ திட்டம்: ஆளுநா் பெருமிதம்

‘பிஎம் கிசான்’ திட்டத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்து, தமிழகம் ஆற்றலுடன் உயா்ந்து வருவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.
Published on

‘பிஎம் கிசான்’ திட்டத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்து, தமிழகம் ஆற்றலுடன் உயா்ந்து வருவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

பிரதமரின் கோவை வருகையையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையின் கீழ் தமிழகத்தின் வளா்ச்சி புதிய ஆற்றல் மற்றும் நோக்கத்துடன் உயா்ந்து வருகிறது. தமிழகத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தால் பயனடைந்துள்ளனா். பிரதமரின் பல திட்டங்கள், இயற்கை விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து விவசாயம், கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துகிறது.

இதேபோல, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், தமிழகத்தை மறுவடிவமைத்து வாழ்வாதாரங்களை உருவாக்கி வருகிறது.

தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழி மீதான பிரதமா் மோடியின்அன்பும் அா்ப்பணிப்பும் உலகளவில் தமிழை உயா்த்தி, ஒவ்வொரு இந்தியரிடமும் தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்கான பெருமையை விதைத்துள்ளன என அதில் குறிப்பிட்டுள்ளாா் ஆளுநா்.

X
Dinamani
www.dinamani.com