

பிகார் காற்று தமிழகத்திலும் வீசுவதாக கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று(நவ. 19) தொடக்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “கோவை மாநாட்டுக்கு தாமதாக வந்ததற்கு நாட்டு மக்களிடமும் விவசாயிகளிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பி.ஆர். பாண்டியன் அவர்கள் மிக அருமையாக உரையாற்றினார்கள். அவரது உரை தமிழில் இருந்ததால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆளுநர் ஆர். என். ரவியிடம் பி.ஆர். பாண்டியனின் உரையை ஆங்கிலம், ஹிந்தியில் மொழிப்பெயர்த்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
நான் இங்கே மேடையில் வந்தபோது விவசாயிகள் துண்டை சுழற்றிக்கொண்டு இருக்கிறார்கள், பிகார் காற்று இங்கும். வீசுகிறதோ எனத் தோன்றியது.
மருதமலையில் குடிக்கொண்டிருக்கும் முருகனை முழுமையாக தலை வணங்குகிறேன். கோவை என்பது கலாசாரம், கனிவு, கவின்படைப்புத் திறன் ஆகியவற்றை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட பூமி. தென் பாரதத்தின் தொழில்முனைவு ஆற்றலின் சக்தி பீடம்.
மேலும், கோவையை பெருமை சேர்க்கும் விதமாக, கோவையை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக, நம் அனைவருக்கும் வழிகாடியாக இருந்து கொண்டிருக்கிறார். கோவை ஜவுளித்துறை இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது” என்றார்.
இதையும் படிக்க: கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கிவைத்தார் மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.