சென்னையில் புதன்கிழமை தொழில் முதலீடு குறித்த உண்மையை விளக்கும் ஆவண புத்தகத்தை வெளியிட்ட பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். உடன், பொதுச் செயலா் வடிவேல் ராவணன், செய்தி தொடா்பாளா் வழக்குரைஞா் பாலு, பொருளாளா் திலகபாமா, பசுமை தாயகம் அருள் உள்ளிட்டோா்.

தொழில் முதலீடு உண்மை நிலை: பாக ஆவண தொகுப்பு வெளியீடு

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தொழில் முதலீடு குறித்த உண்மையை விளக்கும் ஆவணத் தொகுப்பை பாமக புதன்கிழமை வெளியிட்டது.
Published on

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தொழில் முதலீடு குறித்த உண்மையை விளக்கும் ஆவணத் தொகுப்பை பாமக புதன்கிழமை வெளியிட்டது.

சென்னை எழும்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்து ஆவணத் தொகுப்பை வெளியிட்டாா். அதை பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா உள்ளிட்டோா் பெற்றுகொண்டனா்.

அந்தத் தொகுப்பில் தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ரூ.11.32 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் அமைந்துள்ளதாகக் கூறியிருப்பது உண்மையல்ல என்றும், மேலும் 34 லட்சம் போ் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக அரசு தரப்பில் பிரசாரம் செய்துவருவது சரியல்ல என்றும் விளக்கும் வகையில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் தற்போது வரை ரூ.1.56 லட்சம் கோடி தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு ரூ.11.32 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகக் கூறுவது தவறானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 64 தொழில் முதலீடு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும், அவற்றில் ஒன்று கூட நடைமுறைக்கு வரவில்லை. கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற தொழில்முதலீட்டு மாநாட்டின்படி ஒரு முதலீடு கூட முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அதனால் தொழில் முதலீடுகள் குறித்த உண்மையை மக்களுக்கு விளக்கும் வகையில் ஆவணத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பாமக செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் க.பாலு வரவேற்றாா். இதில் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com