குப்பை வண்டியில் உணவு விநியோகம்: ஊழியர்கள் அதிர்ச்சி!

குப்பை வண்டியில் உணவு விநியோகம் செய்தது தொடர்பாக..
உணவு விநியோகத்திற்கு கொண்டுவந்த வண்டி
உணவு விநியோகத்திற்கு கொண்டுவந்த வண்டி
Published on
Updated on
1 min read

கோவையில் மாநகராட்சி ஊழியர்களுக்குக் குப்பை வண்டியில் உணவு கொண்டுவந்து விநியோகம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்க கடந்த 2023 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிக்காக முதலில் ரூ.167.25 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ. 47 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. செம்மொழி பூங்கா பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுத் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. வருகிற 25 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், கடந்த 15 ம் தேதி செம்மொழி பூங்கா பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குத் தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்த மாநகராட்சி ஊழியர்களுக்கு உணவு பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. ஆனால், இந்த உணவுகளை மாநகராட்சியில் குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு வந்து விநியோகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மாநகரில் சேகரமாகும் குப்பை, ஓட்டல் கழிவுகள் அள்ளும் குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்து உள்ளனர். இது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் காட்டுவதாகவும், கிருமிகள் மூலம் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஏற்கெனவே மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள பிரச்னை, பணி நேரம் முரண்பாடு, மாநகராட்சி ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது என பல்வேறு குற்றச்சாட்டுகளை ஊழியர்கள் கூறிவரும் வேளையில், இதுபோன்று குப்பை வண்டியில் கொண்டு வந்து உணவு வழங்கியது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Summary

The distribution of food to Coimbatore Corporation employees in a garbage truck has caused great shock.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com