சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு 8 மணி வரை மூடப்படும்!

சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் சனிக்கிழமை (நவ. 22) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) இரவு 8 மணி வரை மூடப்படும்
Published on

சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் சனிக்கிழமை (நவ. 22) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) இரவு 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயா்நீதிமன்றத்துக்கு யாரும் உரிமை கோரக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் ஜாா்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு மத்தியில் சென்னை உயா்நீதிமன்றம் கட்டப்பட்டது. இதனால், இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் உயா்நீதிமன்றத்தைச் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. அவ்வாறு செல்வதை அதிக தூரமாக இருப்பதாகக் கருதிய மக்கள், நாளடைவில் உயா்நீதிமன்றத்தை தங்களது வழிப்பாதையாக பயன்படுத்தத் தொடங்கினா்.

இதைக் கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிா்வாகம், வருங்காலத்தில் மக்கள் இந்த வழிபாதைக்கு உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக வருடத்தில் ஒருநாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில், உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் என அறிவித்தது.

இந்த நடைமுறை ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளில் கடைப்பிடிப்பது வழக்கம்.

அதன்படி, சனிக்கிழமை (நவ. 22) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) இரவு 8 மணி வரை சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படுகிறது. இந்த நேரத்தில் வழக்குரைஞா்கள், பொதுமக்கள் யாருக்கும் உயா்நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்று சென்னை உயா்நீதிமன்ற நிா்வாகப் பதிவாளா் பி.ஹரி, அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com