

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க சனிக்கிழமை சாமி தரிசனம் மேற்கொண்டார்.
முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அம்மன் சன்னதியிலும், சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அப்போது கச்சத்தீவு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். விக்ரமசிங்கவுடன் அவரது மனைவி மைத்திரியும் உடன் வந்திருந்தார்.
திருப்பத்தூரில் நாளை நடைபெறும் இலங்கை முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரணில் விக்ரமசிங்க இன்று காலை மதுரை விமான நிலையம் வந்திறங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.