259 நாள்களில் நிறைவடைந்த மனசெல்லாம் தொடர்!

மனசெல்லாம் தொடர் 259 நாள்களில் நிறைவடைந்துள்ளது.
மனசெல்லாம் தொடர் .
மனசெல்லாம் தொடர் .படம்: யூடியூப்/ஜீ5
Published on
Updated on
1 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மனசெல்லாம் தொடர் 259 நாள்களில் நிறைவடைந்துள்ளது.

மனசெல்லாம் தொடரின் பிரதான பாத்திரங்களில் சுரேந்தர், தீபக் குமார், வெண்பா, பரமேஸ்வரி ரெட்டி உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.

இந்தத் தொடர், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

அதிக டிஆர்பி பெறும் தொடர்களின் பட்டியலில் மனசெல்லாம் தொடரும் இருந்த நிலையில், திடீரென இந்தத் தொடர் முடிக்கப்பட்டது.

இந்தத் தொடரின் கதாபாத்திரங்களான, ”நந்தினி மற்றும் கரிகாலன் பாத்திரங்களை எப்போதும் மறக்க முடியாது” என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மனசெல்லாம் தொடரின் 2 ஆம் பாகம் எடுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மனசெல்லாம் தொடரை முடிக்க தொடர் குழு முடிவெடுத்த நிலையில், இந்தத் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் நேற்று(நவ. 22) ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தொடர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுகூட நிறைவடையாத நிலையில், தொடர் முடிவடைந்துள்ளது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Summary

The Manasellam series, which was aired on Zee Tamil, has ended in 259 days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com