தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் வரும் பெண்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரத்தில் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் காலை 11 மணிக்கு உள்ளரங்கு கூட்டம் நடைபெறவுள்ளது.
நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2,000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் 1,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் சந்திப்பு நிகழ்வையொட்டி ஜேப்பியார் கல்லூரியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நுழைவுச் சீட்டு வைத்துள்ளவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பதற்காக கல்லூரி நுழைவுவாயிலில் பாதுகாப்புக்காக தன்னார்வலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
க்யூஆர் குறியீடு நுழைவுச்சீட்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு நுழைவுசீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் பலரும் குழந்தைகளுடன் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகளைக் கொண்டுவரும் பெண்கள் தற்போது அனுமதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.