எங்களுக்கு கொள்கையில்லையா? திமுகவின் கொள்கையே கொள்ளைதானே: விஜய் பேச்சு

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பேச்சு...
TVK Vijay speech in kanchipuram people meet
காஞ்சிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பேச்சு
Updated on
1 min read

திமுகவின் கொள்கையே கொள்ளைதானே என காஞ்சிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடங்கியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரத்தில் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் காலை 11 மணிக்கு மக்கள் சந்திப்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய விஜய்,

"நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார் என்ற எம்ஜிஆர் பாட்டு உங்கள் அனைவருக்கும் தெரியும். காஞ்சித் தலைவர் அண்ணா பிறந்தது இந்த காஞ்சிபுரம் மாவட்டம்.

அண்ணா தொடங்கிய கட்சியை இன்று என்னவெல்லாம் செய்கிறார்கள். அவர்கள்(திமுக) நம்மிடம் வன்மத்தோடு இருக்கலாம். அவர்கள் பொய் சொல்லி நம்மை நம்ப வைத்து வாக்கு பெற்றார்கள். இப்போது ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல நாடகம் ஆடுகிறார்கள். அவர்களை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? அவர்களைக் கேள்வி கேட்காமல் இருக்கப்போவது இல்லை.

காஞ்சிபுரத்திற்கும் எனக்கும் தன்னிச்சையாகவே ஒரு இணைப்பு இருக்கிறது. நான் முதல் களப்பயணம் தொடங்கியது பரந்தூர்தான். ஒரு பெரிய மன வேதனைக்குப் பிறகு நான் வந்திருப்பது இந்த காஞ்சிபுரம் மாவட்டம்தான்.

மக்களுக்கு சட்டபூர்வமாக அதிகாரபூர்வமாக ஒரே மாதிரியாக ஒரே எண்ணத்துடன் செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

'மக்களிடம் செல்' என்ற அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றி மக்களுடன் பயணிக்கிறோம். ஆனால், அவர்கள் அண்ணாவை மறந்துவிட்டார்கள். நமக்கு கொள்கையில்லை என்று திமுக தலைவர் சொல்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிஏஏ எதிர்ப்பு, வக்ஃப் திருத்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றது, சமத்துவம், சமூக நீதி என்று கூறிய நமக்கு கொள்கையில்லையா?

திமுகவின் கொள்கையே கொள்ளைதானே.

இன்னும் நாங்கள் அடிக்கவே தயாராகவே இல்லை. அதற்குள்ளாக அலறினால் நாங்கள் என்ன செய்வது?" என்று திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

Summary

TVK Vijay speech in kanchipuram people meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com