/

காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறாா் விஜய்!

காஞ்சிபுரத்தில் இன்று விஜய் மக்களை சந்திக்க இருப்பது பற்றி...

News image

தவெக தலைவர் விஜய் - ENS

Updated On :23 நவம்பர் 2025, 6:32 am IST

காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கவுள்ளாா்.

இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:

தவெக தலைவா் விஜய் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியாா் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2,000 போ் மட்டுமே இதல் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள். கட்சி தொண்டா்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.