சிபிஐ விசாரணைக்கு தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!

சிபிஐ விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் ஆஜராகியிருப்பது பற்றி...
ஆதவ் அர்ஜுனா, ஆனந்த்
ஆதவ் அர்ஜுனா, ஆனந்த்Photo: X/ Aadhav Arjuna
Published on
Updated on
2 min read

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் திங்கள்கிழமை காலை நேரில் ஆஜராகினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை விசாரணை மேற்கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசல் சம்மந்த தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்சாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகரப் பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு சிபிஐ தரப்பில் சம்மன் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து திங்கள்கிழமை காலை 10.50 மணியளவில் கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு வந்து சிபிஐ அதிகாரியின் முன் ஆஜராகினர்.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் பொதுப்பணி துறையின் சுற்றுலா மாளிகை அலுவலகமும் கூடி இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் பொதுப்பணி துறையின் சுற்றுலா மாளிகை அலுவலகமும் கூடி இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.

தொடர்ந்து அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தவெக மாநில நிர்வாகிகள் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானதால், இது குறித்து தகவல் அறிந்ததும் அக்கட்சியினர் ஏராளமானோர் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தும் அலுவலகம் முன் கூடியுள்ளனர்.

Summary

TVK Anand, Adhav Arjuna appear for CBI questioning!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com